search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொதுக்குழு கூட்டம்"

    • தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளின் பதவி காலத்தை மேலும் 3 ஆண்டுகள் நீட்டிப்பு.
    • நடிகர் சங்க கட்டட பணிகள் பாதிக்கும் என்பதால் இந்த முடிவு என தகவல்.

    தென்னிந்திய நடிகர் சங்க 68வது பொதுக்குழு கூட்டம் தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் இன்று நடைபெற்றது.

    நடிகர் சங்க தலைவர் நாசர் தலைமையிலான இந்த பொதுக்குழு கூட்டத்தில் ஏராளமான திரைக்கலைஞர்கள் பங்கேற்றனர்.

    கேரளாவின் ஹேமா கமிட்டி போன்று தமிழ் திரையுலகிலும் கமிட்டி அமைப்பது குறித்தும், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துடனான மோதல் போக்கு குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது.

    இந்நிலையில், தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளின் பதவி காலத்தை மேலும் 3 ஆண்டுகள் நீட்டித்து, பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    தேர்தல் பணிகளை தொடர்ந்தால் நடிகர் சங்க கட்டட பணிகள் பாதிக்கும் என்பதால் இந்த முடிவு என நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

    பிறகு, செய்தியாளர்களை சந்தித்த நடிகர் சங்கத் தலைவர் நாசர் கூறுகையில், "பொதுக்குழு முன்பாக இருந்த சவால்களை மீறி பொதுக்குழு கூட்டம் நடந்துள்ளது. பொதுக்குழு மகிழ்ச்சியாக நடந்துள்ளது. சங்கர தாஸ் சுவாமிகள் பெயரில் டெல்லி கணேஷ், விஜயகுமாரி, 10 நாடக கலைஞர்கள் கவுரவிக்கப்பட்டது.

    10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது" என்றார்.

    நடிகைகளுக்கு பாலியல் புகார் குறித்து நடிகை ரோகிணி பேசுகையில்," 2019ம் ஆண்டிலேயே கமிட்டி உருவாக்கப்பட்டுள்ளது. நடிகர், நடிகை மட்டும் இன்றி யாரும் புகார் கொடுக்கலாம். வழக்கறிஞர், என்ஜிஓ கமிட்டியில் உள்ளனர்.

    புகார் தெரிவிக்க எண் அனைவருக்கும் அனுப்பி வைக்கப்படும்.

    பெண் உறுப்பினர்களுக்கு புகார் எண், எஸ்எம்எஸ் அனுப்பி வைக்கப்படும். புகாருக்கு உள்ளான நபர் 5 ஆண்டுகள் நடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. புகார் குறித்து வெளியே தெரிவிக்கப்படாது. எந்த பெண்ணும் பயத்துடன் இருக்கக்கூடாது.

    எந்த நடிகையும் தைரியமாக புகார் கூறலாம்.

    நடிகை மீதான புகார் பெரிதுபடுத்தப்படுகிறது. நடிகை கூறும் புகார் மட்டும் திரும்ப திரும்ப பேசப்படுகிறது. எல்லா துறையிலும் அத்துமீறல் இருக்கிறது" என்றார்.

    • கடந்த ஜூன் 23ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு.
    • இந்த மனு காலாவதி ஆகிவிட்டதாக அறிவிப்பு.

    கடந்தாண்டு ஜூன் மாதம் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு எதிராக பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    சென்னை வானகரத்தில் கடந்த ஜூன் 23ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து தொடரப்பட்ட இந்த வழக்கில்," பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க மறுப்பு" தெரிவித்திருந்தார்.

    மேலும், "அப்போது, ஜூன் 23-ம் தேதி பொதுக்குழுவை எதிர்த்த இந்த மனு காலாவதி ஆகிவிட்டதாக" தெரிவித்த நீதிபதி, சண்முகத்தின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

    • தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் 6 நாட்களுக்கு தொடர் நிகழ்ச்சிகளை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
    • அக்டோபர் 5-ம் நாள் அனைத்து ஒன்றிய, நகர, பேரூர் அளவில் இருசக்கர ஊர்தி பேரணிகள் நடத்தப்பட வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மக்களவைத் தேர்தல்களை எதிர் கொள்வதற்கான பாட்டாளி மக்கள் கட்சியின் செயல்திட்டத்தின் படி, பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் அக்டோபர் மாதத் தொடக்கத்தில், தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் 6 நாட்களுக்கு தொடர் நிகழ்ச்சிகளை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. கீழ்க்கண்ட அட்டவணைப்படி பாட்டாளி மக்கள் கட்சியின் நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும்.

    அக்டோபர் 1-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை அனைத்து அமைப்பு மாவட்டங்களிலும் ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், தலைவர்கள் கூட்டம் நடத்தப்பட வேண்டும். இந்தக் கூட்டத்தை மாவட்ட செயலாளர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும். இந்தக் கூட்டத்தில் அடுத்து வரும் 5 நாட்களுக்கான நிகழ்ச்சிகளை எவ்வாறு நடத்த வேண்டும் என்பது குறித்து ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், தலைவர்களுக்கு மாவட்ட செயலாளர்கள் வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும்.

    அக்டோபர் 2-ந் தேதி திங்கள்கிழமை அனைத்து கிராமங்கள், நகரங்கள் மற்றும் பேரூர்களில் பாட்டாளி மக்கள் கட்சியின் கொடியேற்றும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும். அதன் தொடர்ச்சியாக வருகிற 3-ந் தேதி மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட வேண்டும். கிராம அளவிலான கட்சிக் கூட்டங்கள் 4-ந் தேதி நடத்தப்பட வேண்டும். இந்தக் கூட்டத்தில் அனைத்து நிலை நிர்வாகிகளும் அவரவர் கிராமங்களில் நடத்தப்படும் கூட்டங்களில் பங்கேற்க வேண்டும். அக்டோபர் 5-ம் நாள் அனைத்து ஒன்றிய, நகர, பேரூர் அளவில் இருசக்கர ஊர்தி பேரணிகள் நடத்தப்பட வேண்டும்.

    அக்டோபர் 8-ம் நாள் ஒன்றிய, நகர, பேரூர் அளவிலான கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும். அனைத்துக் கூட்டங்களிலும் மக்களவைத் தேர்தலுக்கான செயல்திட்டங்கள், குறித்து விவாதிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் நடத்தப்பட்ட கூட்டங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளின் விவரங்கள், அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து விரிவான அறிக்கை தயாரிக்கப்பட்டு தைலாபுரம் தோட்டத்தில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • வாழப்பாடி பெண்கள் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
    • கூட்டத்தில் கலந்து கொண்ட பங்குதாரர்களுக்கு சான்றிதழ்களும், உறுப்பினர்களுக்கு மரக்கன்றுகளும் வழங்கப்பட்டது.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் அருகே மேட்டுப்பட்டி தாதனூரில் அயோத்தி பெண்கள் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் மற்றும் வாழப்பாடி பெண்கள் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் வாழப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் பிரபாவதி, வீரபாண்டி களஞ்சியம் கூட்டமைப்பு நிர்வாகி சிவராணி, அயோத்தி பெண்கள் கூட்டமைப்பு முதன்மை செயல் அலுவலர் மேரிஸ்டெல்லா, வாழப்பாடி பெண்கள் உழவர் உற்பத்தியாளர் நிறுவன முதன்மை செயல் அலுவலர் விஷ்ணுபிரியா ஆகியோர், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் செயல்பாடுகள், எதிர்கால திட்டங்கள், பொருளாதார மேம்பட்டிற்கான வாய்ப்புகள் குறித்து எடுத்துரைத்தனர். கூட்டத்தில் கலந்து கொண்ட பங்குதாரர்களுக்கு சான்றிதழ்களும், உறுப்பினர்களுக்கு மரக்கன்றுகளும் வழங்கப்பட்டது.

    • பா.ம.க. பொதுக்குழு கூட்டம் நடந்தது.
    • பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக மாபெரும் ரெயில் நிலையம் முற்றுகை போராட்டம் நடைபெறும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் தேனி சை.அக்கீம் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக மாநில சிறுபான்மை பிரிவு தலைவர் முனைவர் ஷேக் மொகைதீன் கலந்து கொண்டார். ராமநாதபுரம் நகரச் செயலாளர் பாலா வரவேற்றார்.மாவட்ட தலைவர் சந்தன தாஸ், மாவட்ட அமைப்பு செய லாளர் சதாம் ராஜா, மாவட்ட அமைப்பு தலைவர் ஜீவா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இக்கூட்டத்தில் ராமநாதபுரம்-கீழக்கரை தொடர்வண்டி மேம்பா லத்தை உடனடியாக நிறைவு செய்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

    இல்லையென்றால் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக மாபெரும் ரெயில் நிலையம் முற்றுகை போராட்டம் நடைபெறும். தி.மு.க. அரசு அடுத்த தேர்தல் வாக்குறுதியின்படி சிறையில் உள்ள அப்பாவி இஸ்லாமியர்களை விடுதலை செய்ய வேண்டும். இதனை நிறைவேற்றா விட்டால் பா.ம.க. சிறுபான்மை பிரிவு சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இக்கூட்டத்தில் பசுமை தாயத்தின் மாநில துணைச் செயலாளர் பொறியாளர் கர்ண மகாராஜன், மாவட்ட துணைச் செயலாளர் தொண்டி ராசிக், மாவட்ட தொழிற்சங்க தலைவர் லட்சுமணன்,மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் துல்கர், இளைஞர் சங்கத் தலைவர் ஸ்டாலின், மாணவர் சங்கத் தலைவர் சந்தோஷ், மாணவர் சங்க அமைப்பாளர் கார்த்திக், ராமநாதபுரம் ஒன்றிய செயலாளர் பொறியாளர் கட்டிட பொறியாளர் சரீஃப், மண்டபம் ஒன்றிய செயலாளர் வெங்கடேசன், திருப்புல்லாணி ஒன்றிய செயலாளர் மக்தும் கான், கீழக்கரை நகர செயலாளர் லோக நாதன்,மற்றும் திரளாக கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர் மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் இப்ராஹிம் நன்றி கூறினார்.

    • தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக சேலம் மாவட்ட பொதுக்குழு கூட்டம் இன்று நடந்தது.
    • கூட்டத்தில் ஆசிரியர்கள் பணிப்பதிவேடு மட்டும் எமிசில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

    சேலம்:

    தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக சேலம் மாவட்ட பொதுக்குழு கூட்டம் இன்று நடந்தது.

    மாவட்டச் செயலாளர் ரவி தலைமை வகித்தார். பொருளாளர் சுரேஷ் குமார் வரவேற்றார். செய்தி தொடர்பாளர் சண்முகம், சட்ட செயலாளர் மோகன், மகளிர் அணி அருள்மொழி, ஜெயந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முன்னாள் மாநில பொதுச் செயலாளர் கோவிந்தன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் ஆசிரியர்கள் பணிப்பதிவேடு மட்டும் எமிசில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

    இதர எமிஸ் பணியில் இருந்து விடுவிக்க வேண்டும். மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வு நடத்துவதை முற்றிலும் கைவிட வேண்டும். பணி பாதுகாப்பு சட்டம்இயற்ற வேண்டும். ஆசிரியர்களின் பணி வரன் முறை, தகுதி தான் பருவம், தேர்வு நிலை, சிறப்பு நிலை போன்ற கருத்துக்கள் மீது உடனடி தீர்வு காண மாதந்தோறும் இரண்டாம் சனிக்கிழமை குறைதீர் கூட்டம் நடத்த வேண்டும். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 தேர்ச்சி வழங்கிய ஆசிரியர்களை பாராட்டி சான்றிதழ் வழங்க வேண்டும். என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • மருந்து வணிகர்கள் சங்க பொதுக்குழு கூட்டம், திருத்துறைப்பூண்டியில் நடைபெற்றது.
    • ஒரே மருந்து, ஒரே விலை என்பதை நாடு முழுவதும் உறுதி செய்ய வேண்டும்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்ட, மருந்து வணிகர்கள் சங்க பொதுக்குழு கூட்டம், திருத்துறைப்பூண்டியில் சங்கத்தின் தலைவர் லட்சுமணன் தலைமையில் நடைபெற்றது.

    செயலாளர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார்.

    பொருளாளர் நடராஜன், நிர்வாகிகள் பாபு, பாஸ்கரன், மற்றும் திருவாரூர் மாவட்டம் முழுவதுமிருந்து வந்திருந்த மருந்து வணிகர்கள் பங்கேற்றனர்.

    கூட்டத்தில், ஆன்லைன் மருந்து விநியோகஸ்தர்களுக்கு உரிமம் வழங்கப்படாத நிலையில், மத்திய அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ஆன்லைன் மருந்து விநியோகஸ்தர்களை பேச்சுவார்த்தைக்கு அழைப்பதை தவிர்க்க வேண்டும்.

    ஒரே மருந்து, ஒரே விலை என்பதை நாடு முழுவதும் உறுதி செய்ய வேண்டும்.

    உரிமங்கள் இன்றி ஆன்லைன் மூலம் மருந்துகள் விற்பனை செய்யப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.

    உரிமங்கள் இல்லாத மருந்து வணிகர்களுக்கு மருந்துகளை விநியோகம் செய்கின்ற விநியோகஸ்தர்கள், தயாரிப்பு நிறுவனங்கள் மீது மருந்துகள் கட்டுப்பாட்டுத் துறை வழக்கு தொடர வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • வருகின்ற நவம்பர் மாதம் நடக்கிறது
    • நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்

    வேங்கிக்கால்

    திருவண்ணாமலையில் மாவட்ட சீனியர் தடகள சங்க பொதுக்குழு கூட்டம் மாவட்ட தலைவர் கார்த்தி வேல்மாறன் தலைமையில் நடைபெற்றது. வருகின்ற நவம்பர் மாதம் மாவட்ட விளையாட்டு அரங்கில் மாநில சீனியர் தடகள போட்டிகள் நடைபெற உள்ளன.

    இதில் அனைத்து மாவட்டத்தில் இருந்தும் வீரர்கள் வர உள்ள நிலையில் முன்னேற்பாடு பணிகள் குறித்தும் அனைத்து அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்திற்கு செயலாளர் சுரேஷ்குமார் அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    • தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் விரைந்து செயல் படுத்த தேவையான நிதியை தமிழக அரசு ஒதுக்கி விரைந்து தொழிற் சாலைகள் அமைத்து இளை ஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்க வேண்டும்.
    • தருமபுரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி செயல்படும் பகுதிகளில் போதை பொருட்கள் நடமாட்டம் அதிக அளவில் உள்ளன.

    தருமபுரி,

    தருமபுரி மேற்கு மாவட்ட பாட்டாளி இளைஞர் சங்க பொதுக்குழு கூட்டம் ஒட்டப்பட்டியில் நடைபெற்றது.

    இந்த கூட்டத்திற்கு தருமபுரி சட்டமன்ற உறுப்பினரும், பாட்டாளி மக்கள் கட்சியின் தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளருமான

    எஸ்.பி. வெங்கடேஷ்வரன் கலந்து கொண்டு கூட்டத்தின் நோக்கம் குறித்து சிறப்புரையாற்றினார்.

    இந்த கூட்டத்தில் இளைஞர் சங்க ஒன்றிய தலைவர்கள், செயலாளர்கள், பாட்டாளி மக்கள் கட்சியின் ஒன்றிய தலைவர்கள், செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் விரைந்து செயல்படுத்த தேவையான நிதியை தமிழக அரசு ஒதுக்கி விரைந்து தொழிற் சாலைகள் அமைத்து இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்க வேண்டும்.

    தருமபுரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி செயல்படும் பகுதிகளில் போதை பொருட்கள் நடமாட்டம் அதிக அளவில் உள்ளன. மாணவர்கள், இளைஞர்கள் போதை பழக்கத்திற்கு அடிமை யாகும் சூழ்நிலை உள்ளதால் போதை பொருட்களை தடுக்கின்ற வகையில் உடனடியாக மாவட்ட நிர்வாகம் நட வடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    காவிரி ஆறு தருமபுரி மாவட்டத்தின் வழியாக தான் முதலில் நுழைகிறது. காவிரி உபரிநீரை தருமபுரி மாவட்டத்திலுள்ள அனைத்து ஏரி, குளங்களும் நிரப்புகின்ற வகையில் காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்தி வேலைத்தேடி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் சென்று பல லட்சம் இளைஞர்கள் கூலித் தொழில் செய்வதை தடுக்கின்ற வகையிலும், தருமபுரி மாவட்ட விவசாய பெருமக்கள் விவசாய தொழிலை மேம் படுத்துக் கின்ற வகையிலும் இத் திட்டத்தை உடனடியாக செயல் படுத்த வேண்டும்.

    தருமபுரி மாவட்டத்திலுள்ள அனைத்து கிராமங்களிலும் பாட்டாளி இளைஞர் சங்கத்தை மேம்படுத்து கின்ற வகையில், இளைஞர்களை ஒருங்கி ணைத்து கிராம கூட்டங்கள் நடத்த வேண்டும் என தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

    • அகில பாரத ஐயப்ப சேவா சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது.
    • நிகழ்ச்சி முடிவில் ஞானகுமார் நன்றி கூறினார்.

    மேலூர்

    அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தின் மதுரை மாவட்ட பொதுக்குழு கூட்டம் மேலூர் கோட்டை கிணறு தெருவில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாநிலத் தலைவர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார். மதுரை மாவட்ட செயலாளர் பாண்டியராஜன் முன்னிலை வகித்தார். மதுரை 6-ம் பகுதி செயலாளர் பிரகாஷ் வரவேற்றார். செயலாளர் விஸ்வநாதன் முன்னிலை வகித்தார். சபரிமலை சேவைகள், சங்க வளர்ச்சி குறித்தும் கலந்து ஆலோசிக்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மேலூர் நகர்மன்ற தலைவர் முகமது யாசின், 7-வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் கமாலுதீன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலூர் துணைச் செயலாளர் அழகுராஜா மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிவில் ஞானகுமார் நன்றி கூறினார்.

    • வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடா சலபதி பேலஸ் மண்டபத்தில் நடைபெற உள்ளது.
    • அனைத்து கழக பொதுக் குழு உறுப்பினர்களும் தங்களுக்கான அழைப்பிதழோடு தவறாமல் கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெற உள்ளது.

    இந்த தேர்தலுக்காக ஒவ்வொரு கட்சியும் இப்போதே தங்களை தயார்படுத்தி வருகிறது. எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைப்பது எத்தனை இடங்களில் போட்டியிடுவது என்று இப்போதே முடிவு செய்ய ஆரம்பித்துவிட்டனர்.

    அந்த வைகயில் டி.டி.வி.தினகரன் தலைமை யிலான அ.ம.மு.க. தற்போது ஓ.பன்னீர்செல்வத்துடன் பாராளுமன்ற தேர்தலில் இவர்களுக்குள் கூட்டணி உடன்பாடு ஏற்படும் என தெரிகிறது.

    தேவர் சமுதாய வாக்குகளை முழுமையாக பெறுவதற்கு இவர்களது வியூகம் அமையும் என தெரிகிறது.

    இந்த நிலையில் அ.ம.மு.க. பொதுக் குழுக்கூட்டம் வருகிற ஆகஸ்டு மாதம் 6-ந் தேதி கூடுகிறது.

    இது தொடர்பாக அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    அ.ம.மு.க. பொதுக்குழு கூட்டம், கழக துணைத்தலைவர் எஸ்.அன்பழகன் (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்) தலைமையில் வருகிற 6-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை 8.30 மணிக்கு சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடா சலபதி பேலஸ் மண்டபத்தில் நடைபெற உள்ளது.

    அனைத்து கழக பொதுக் குழு உறுப்பினர்களும் தங்களுக்கான அழைப்பிதழோடு தவறாமல் கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

    • பொதுக்குழு கூட்டம் கோட்ைடயில் உள்ள தனியார் திருமண மண்ட பத்தில் நடைபெற்றது.
    • கூட்டத்தில் மாவட்ட தலைவர் ஹாஜி அன்வர்பாஷா தலைமை வகித்தார்.

    தருமபுரி,

    இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தருமபுரி மாவட்ட புதிய நிர்வாக உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் பொதுக்குழு கூட்டம் கோட்டையில் உள்ள தனியார் திருமண மண்ட பத்தில் நடைபெற்றது.

    கூட்டத்தில் மாவட்ட தலைவர் ஹாஜி அன்வர்பாஷா தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் நிசாமுதீன் வரவேற்புரை வழங்கினார்.

    சிறப்பு விருந்தினராக கட்சியின் மாநில பொது செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஹாஜி முகமது அபூபக்கர் கலந்து கொண்டு பேசினார்.

    மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சேலம் அன்சர் பாஷா, சேலம் மாவட்ட துணை செயலாளரும் வழக்கறிஞருமான ஷாகுல் அமீத், மாநில யூத் லீக் தலைவர் பள்ளப்பட்டி யூனுஸ் சாஹெப், இளைஞர் அணி தேசிய துணை தலைவர் ஜக்கிரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் தருமபுரி மாவட்ட தலைவராக ஹாஜி சையத் அன்வர் பாஷா, மாவட்ட முதன்மை துணை தலைவராக நிசாமுதீன், மாவட்ட செயலராக சிராஜீதீன், மாவட்ட பொருளாளராக இளம்பிறை சுலைமான், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளராக அலாவுதீன், மாவட்ட அணி அமைப்பாளராக இலியாஸ்பாஷா, உலாம அணி அமைப்பாளராக ஷபீல் அகமது, வனிதா அணி மாவட்ட அமைப்பாளராக ஆயிஷா ஜாஸ்மின் மற்றும் 2 துணை தலைவர்கள், 2 துணை செயலாளர்கள், மாவட்ட துணை தலைவராக அப்துல் ரஷீத், அரூர், மாவட்ட துணை செயலா–ளராக பாபு மற்றும் ரிஸ்வான், மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளராக ரகமதுல்லா ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை இளம்பிறை சுலைமான், அலாவுதீன், ஆகியோர் செய்து இருந்தனர். 

    ×